மினரல் வாட்டர் ப்ளான்ட்

புதன், 15 ஜூன், 2011

சர்தாரு கார் ஓட்டுனாரு

                                    நம்ம சர்தாரு ஒரு நாள் தன்னோட விலை உயர்ந்த கார் ஐ எடுத்துகிட்டு , பக்கத்து ஊருக்கு ஒருத்தருக்கு பணம் கொடுக்க போறாரு. அவரு போகும் போது வழியில ஒரு காட்டு பாதை  வந்துருச்சு , அங்க இருந்த திருடன்கள் நான்கு பேரு சர்தார்ஜி கார் ஐ பார்த்துட்டு   லிப்ட் கேட்கற மாதிரி கை காண்பிக்கிரானுங்க .
                                     நம்ப சர்தாரு அதை பார்த்துட்டு உடனே கார் ஐ நிறுத்திபுட்டு என்னான்னு கேட்க , அவனுங்க அவரை இறங்க சொல்லிபுட்டு அவரு சூட்கேஸ் ல இருக்கற பணத்த திருடரானுங்க , உடனே அவரு டே சாமிங்களா திருடாதிங்க , திருடாதிங்க ன்னு கெஞ்சறாரு , கதற்றாரு... இவரோட ரோதன தாங்க முடியாம ஒருத்தன் , பக்கத்துல ஒரு பெரிய வட்டமா குச்சில கீழ வரஞ்சு ", மவனே எந்த வட்டத்த உட்டு, வெளில வந்த , நாங்க உன்னைய  கொண்டே போடுவோம்னு  " சொல்லவும் சர்தாரு பயந்துகிட்டு அங்கேயே நிக்கிறாரு ..
.
                                   அவனுங்க பணத்தை எடுத்துகிட்டு அந்த கார ஐ அடித்து நொறுக்கரானுங்க, சர்தாரு நம்பள மிந்திகிட்டு போயி எங்கேயும் கம்ப்ளைன்ட் பண்ணிற கூடாதுன்னு ட்டு  ..

                                    அவனுங்க வேலையெல்லாம் முடிஞ்சதுக்கப்புறம் சர்தாரு பக்கம் வர்றானுங்க .. அப்பா சர்தாரு பயங்கரமா சிரிக்கிறாரு ... திருடனுங்க " யோவ் ஏன்யா இந்த சிரி சிரிக்கிற , இது உன் கார் , உன் பணம் தானே .. அப்புறம் எப்புடி உனக்கு இவ்வளவு கஷ்டத்திலையும் சிரிப்பு வருது ன்னு கேட்க,

                                    நான் சொன்னா என்னைய அடிச்சு கொல்ல மாட்டீங்களே - ன்னு  சர்தாரு கேட்க , அதெல்லாம் ஒன்னும் செய்ய மாட்டோம் . இப்போ சொல்லு ஏன் சிரிக்கிற ,
                                 
                                    அதுக்கு அந்த சர்தாரு ", இல்லை நீங்க என் கார் ஐ அடிச்சு நொறுக்கிகிட்டு இருந்தப்ப நான் இந்த வட்டத்த விட்டு மூணு    தடவ   வெளியில வந்தேன் , ஆனா அத நீங்க யாரும் கவனிக்கிலை அதனால சிரிச்சேன்னு சொன்னாறு நம்ப சர்தாரு ...
                                

சும்மா படிச்சுட்டு சிரிச்சுட்டு மட்டும் போனா எப்புடி சார் ? இன்ட்லியிலும் தமிழ்மணத்திலும் ஒட்டு போடுங்க சார்

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக