மினரல் வாட்டர் ப்ளான்ட்
ஞாயிறு, 26 ஜூன், 2011
செவ்வாய், 21 ஜூன், 2011
சர்தாரு சமையல்
ஒரு மாடில 20 ஆவது ப்ளோர் ல , ஒரு தமிழன் , மலையாளி மற்றும் ஒரு சர்தாரு வேலை செய்யறாங்க.
லஞ்ச் brake ல மூனு பேரும் ஒண்ணா சாப்புடறாங்க . அப்போ தமிழன் டிபன் பாக்ஸ் ஐ தொறந்து பார்த்து " அட ச்சே ! இன்னைக்கும் அதே இட்லி வடை சாம்பார் தானா ன்னு கத்திட்டு , இனிமே எனக்கு இதே டிபன் வந்துச்சு நான் 20 ஆவது ப்ளோர் ல இருந்து கீழ விழுந்து தற்கொலை பண்ணிக்குவேன் ன்னு சொல்றான் .
மலையாளி டிபன் பாக்ஸ் ஐ தொறந்து பார்த்து " அட ச்சே ! இன்னைக்கும் அதே புட்டு , கடலை தானா ன்னு கத்திட்டு , இனிமே எனக்கு இதே டிபன் வந்துச்சு நானும் 20 ஆவது ப்ளோர் ல இருந்து கீழ விழுந்து தற்கொலை பண்ணிக்குவேன் ன்னு சொல்றான் .
அடுத்து நம்ப சர்தாரு டிபன் பாக்ஸ் ஐ தொறந்து பார்த்து " அட ச்சே ! எனக்கும் இன்னைக்கு பாருங்க அதே பரோட்டா தானா ன்னு கத்திட்டு , இனிமே எனக்கு இதே டிபன் வந்துச்சு நானும் 20 ஆவது ப்ளோர் ல இருந்து கீழ விழுந்து தற்கொலை பண்ணிக்குவேன் ன்னு சொல்றான் .
அடுத்த நாளு எல்லாத்துக்கும் அதே டிபன் வர , அடுத்தடுத்து ஒவ்வொரு ஆளா கீழ விழுந்து தற்கொலை பண்ணிக்கிறாங்க . உடனே அவங்க பொண்டாட்டிங்க எல்லாம் வந்து அழுது ஒப்பாரி வைக்கிறாங்க .
தமிழன் பொண்டாட்டி " என்னங்க எனக்கு இந்த விசியம் தெரிஞ்சு இருந்துச்சுன்ன நானு உங்களுக்கு வேற டிபன் பண்ணி கொடுத்திருப்பேன் - ன்னு சொல்லி அழுவறா.
மலையாளி பொண்டாட்டி " என்னங்க எனக்கு இந்த விசியம் தெரிஞ்சு இருந்துச்சுன்ன நானு உங்களுக்கு வேற டிபன் பண்ணி கொடுத்திருப்பேன் - ன்னு சொல்லி அழுவறா.
இப்போ எல்லாரும் சர்தாரு பொண்டாட்டி யை பார்க்குறாங்க , " அவ சொல்லுறா , ஐயோ என்னைய ஏன் எல்லாரும் பார்க்குறிங்க , எப்பயுமே காலைல டிபன் அவரு தான் செஞ்சு லஞ்ச் எடுத்துகிட்டு போவாரு " ன்னு சொல்லி அழுவறா.
சும்மா படிச்சுட்டு சிரிச்சுட்டு மட்டும் போனா எப்புடி சார் ? இன்ட்லியிலும் தமிழ்மணத்திலும் ஒட்டு போடுங்க சார்
வெள்ளி, 17 ஜூன், 2011
சர்தாரு துப்பாக்கி எடுத்தாரு
ஒரு தடவை நம்ப சர்தாரு ஆர்மி - ல சோல்ஜர வேலை செய்றாரு . அப்போ பாகிஸ்தான் நாட்டு ஆர்மி கூட நம்ப ஆளுங்க சண்டை வந்து பெரிய யுத்தம் நடக்குது. அப்போ அடுத்து அவனுங்க நம்ப ஏரியா வ ஆக்கிரமிச்சு யுத்தத்துல ஜெயிக்க கூடிய ஒரு நெலமை வருது .
உடனே நம்ப சர்தாரு பொங்கி எழுந்து , நான் காப்பாதிறேன் பாருடா நாட்டை ன்னு ஒரு பெரிய கொசு வலையை எடுத்து தன் உடம்பு மேல போட்டுக்கிட்டு , எ.கே 47 துப்பாக்கிய எடுத்துகிட்டு வெளிய போயி பாகிஸ்தான் காரனுங்களை பார்த்து வெறித்தனமா சுடராறு. அவனுங்க எல்லாம் தெறிச்சு ஓடி அந்த போரு ல நம்ம இந்தியா வுக்கு வெற்றி கிடைச்சுடுச்சு. அடுத்த நாலு அவருக்கு ஒரு பெரிய பாராட்டு விழா எல்லாம் எடுத்து மெடல் கொடுத்து கௌரவிக்கிறாங்க .
அப்புறம் சாயந்தரமா சர்தாரு நண்பர்கள் எல்லாம் கேட்குறாங்க , ஏன்டா நீ போயி சுட்டதெல்லாம் பெரிய விசியம் கிடையாது ஆனா கொசு வலையை எடுத்து எதுக்கு உடம்பு மேல போட்டு கிட்டு போன ன்னு . அதுக்கு நம்ப சர்தாரு , ஏன்டா சின்ன கொசுவாலேயே இந்த கொசு வலைகுள்ளே போக முடியாதே ! அப்புறம் அவ்வளவு பெரிய புல்லெட் எப்புடி அதுக்குள்ளே போகும் ன்னு கேட்கறாரு ..
அப்புறம் ஒரு சில வருடங்கள் கழித்து அவர் பையன் குட்டி சர்தாரு ராணுவத்துல வேலைக்கு போயி சேர்றாரு , அப்பன் ரிடியர் ஆகி போய்ட்டார். அப்பாவும் அதே மாதிரி ஒரு சண்டை , குட்டி சர்தாரு நம்ப அப்பாவை போலவே ஒரு சாகசம் செஞ்சு அப்பா பெற காப்பத்தனும் நு இவரும்
எ.கே 47 துப்பாக்கிய எடுத்துகிட்டு வெளிய போயி பாகிஸ்தான் காரனுங்களை பார்த்து வெறித்தனமா சுடராறு, ஆனா இவரு மேல துப்பாக்கி குண்டு பாஞ்சு இவரை ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணிடறாங்க .
அப்புறம் இவரு நண்பர்கள் எல்லாம் கேட்குறாங்க , ஏன்டா நீ போயி சுட்டதெல்லாம் பெரிய விசியம் கிடையாது. ஆனா உங்கப்பன் னாச்சும் கொசுவலை மேல போட்டுக்கிட்டு போனான் . ஆனா நீ ஒண்ணுமே போட்டுக்கிட்டு போவிலியே. எப்பிடிடா ன்னு கேட்க்க
அதுக்கு குட்டி சர்தாரு , சொன்னாரு போங்கடாங்க , நான் ஓடோமொஸ் போட்டுக்கிட்டு போயிருந்தேன் ன்னு
சும்மா படிச்சுட்டு சிரிச்சுட்டு மட்டும் போனா எப்புடி சார் ? இன்ட்லியிலும் தமிழ்மணத்திலும் ஒட்டு போடுங்க சார்
வியாழன், 16 ஜூன், 2011
சர்தாரு ஜோக்ஸ்
1. சர்தாரை அவரோட குடும்ப டாக்டர் , யப்பா நீ ரொம்ப வெயிட் ஆ 132 கிலோ இருக்குற . அதனால டெய்லி 5 கிலோ மீட்டர் ஒடுனியின்னா ஒரு 100 நாள்ல ஒரு 30 கிலோ குறையும்நு சொல்றாரு , சரின்னு சர்தாரு 100 நாள் கழிச்சு குடும்ப டாக்டர்க்கு போன் பண்ணி சார் நீங்க சொன்ன மாதிரி எனக்கு எடை எல்லாம் குறைஞ்சு போச்சு , ஆனா நான் தான் வீட்டை விட்டு 500 கிலோ மீட்டரூ தூரத்துல இருக்கேன் ன்னு சொன்னாரு ..
௨. நம்ப சர்தாரு செத்து மேலோகம் போறாரு , அங்க இருக்கிற சித்திர குப்தன் , " .இங்க இருக்கிற ருல்ஸ் பிரகாரம் , நீ ரெண்டு கேள்விக்கி பதில் சொன்னியின்னா உனக்கு சொர்கத்துல ஜாலிய இருக்கிரத்துக்கு நாங்க அனுமதிப்போம்" . ன்னு சொல்றாரு ..
சரிங்க கேளுங்க ன்னு நம்பாளு சொல்றாரு ,அதுக்கு சித்திர குப்தன்,
முதல் கேள்வி :- ஒரு வாரத்துல இருக்கிற நாட்கள்ல " T " ல ஆரம்பிக்கிறது எது ?
இரண்டாவது கேள்வி :-ஒரு வருசத்துக்கு எத்தினை SECONDS இருக்கு ?
கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் சர்தாரு யோசிச்சு சரிங்க நான் சொல்றேன் ன்னு ,
முதல் கேள்வி விடை :- ஒரு வாரத்துல இருக்கிற நாட்கள்ல " T " ல ஆரம்பிக்கிறது ஒன்னு "" TODAY" , இன்னொன்னு " TOMORROW "
இரண்டாவது கேள்வி விடை: - ஒரு வருசத்துக்கு 12 SECONDS இருக்கும் - னு சொல்றாரு .
சித்திர குப்தன் உடனே ஆச்சர்யபட்டு ," யோவ் சர்தாரு , எனக்கு ஒரே ஆச்சர்யமா இருக்கு, யாருமே யோசிக்காத ஒரு பதிலை முதல் கேள்விக்கு கொடுத்திருக்க , "" TODAY" , " TOMORROW " ன்னு ,, சரி பரவாயில்லை, அத கோட நாங்க எங்க ஆன்சர் புக் ல சேத்துக் கொள்கிறோம் , ஆனா இரண்டாவது கேள்விக்கு எப்பிடிய்யா 12 SECONDS இருக்கும் - னு சொல்ர
அதுக்கு சர்தாரு , சரி சொல்லுறேன் , ஒரு வருசத்துல , ஜனவரி 2 nd , பிப்ரவரி 2 nd, மார்ச் 2 nd, ஏப்ரல் 2 nd, .........டிசம்பர் 2 nd, ன்னு மொத்தம் 12 SECONDS இருக்கும் ன்னு சொன்னாரு ,
உடனே சித்திர குப்தன் மயக்கமாயிட்டாரூ
சும்மா படிச்சுட்டு சிரிச்சுட்டு மட்டும் போனா எப்புடி சார் ? இன்ட்லியிலும் தமிழ்மணத்திலும் ஒட்டு போடுங்க சார்
புதன், 15 ஜூன், 2011
சர்தாரு கார் ஓட்டுனாரு
நம்ம சர்தாரு ஒரு நாள் தன்னோட விலை உயர்ந்த கார் ஐ எடுத்துகிட்டு , பக்கத்து ஊருக்கு ஒருத்தருக்கு பணம் கொடுக்க போறாரு. அவரு போகும் போது வழியில ஒரு காட்டு பாதை வந்துருச்சு , அங்க இருந்த திருடன்கள் நான்கு பேரு சர்தார்ஜி கார் ஐ பார்த்துட்டு லிப்ட் கேட்கற மாதிரி கை காண்பிக்கிரானுங்க .
நம்ப சர்தாரு அதை பார்த்துட்டு உடனே கார் ஐ நிறுத்திபுட்டு என்னான்னு கேட்க , அவனுங்க அவரை இறங்க சொல்லிபுட்டு அவரு சூட்கேஸ் ல இருக்கற பணத்த திருடரானுங்க , உடனே அவரு டே சாமிங்களா திருடாதிங்க , திருடாதிங்க ன்னு கெஞ்சறாரு , கதற்றாரு... இவரோட ரோதன தாங்க முடியாம ஒருத்தன் , பக்கத்துல ஒரு பெரிய வட்டமா குச்சில கீழ வரஞ்சு ", மவனே எந்த வட்டத்த உட்டு, வெளில வந்த , நாங்க உன்னைய கொண்டே போடுவோம்னு " சொல்லவும் சர்தாரு பயந்துகிட்டு அங்கேயே நிக்கிறாரு ..
.
அவனுங்க பணத்தை எடுத்துகிட்டு அந்த கார ஐ அடித்து நொறுக்கரானுங்க, சர்தாரு நம்பள மிந்திகிட்டு போயி எங்கேயும் கம்ப்ளைன்ட் பண்ணிற கூடாதுன்னு ட்டு ..
அவனுங்க வேலையெல்லாம் முடிஞ்சதுக்கப்புறம் சர்தாரு பக்கம் வர்றானுங்க .. அப்பா சர்தாரு பயங்கரமா சிரிக்கிறாரு ... திருடனுங்க " யோவ் ஏன்யா இந்த சிரி சிரிக்கிற , இது உன் கார் , உன் பணம் தானே .. அப்புறம் எப்புடி உனக்கு இவ்வளவு கஷ்டத்திலையும் சிரிப்பு வருது ன்னு கேட்க,
நான் சொன்னா என்னைய அடிச்சு கொல்ல மாட்டீங்களே - ன்னு சர்தாரு கேட்க , அதெல்லாம் ஒன்னும் செய்ய மாட்டோம் . இப்போ சொல்லு ஏன் சிரிக்கிற ,
அதுக்கு அந்த சர்தாரு ", இல்லை நீங்க என் கார் ஐ அடிச்சு நொறுக்கிகிட்டு இருந்தப்ப நான் இந்த வட்டத்த விட்டு மூணு தடவ வெளியில வந்தேன் , ஆனா அத நீங்க யாரும் கவனிக்கிலை அதனால சிரிச்சேன்னு சொன்னாறு நம்ப சர்தாரு ...
சும்மா படிச்சுட்டு சிரிச்சுட்டு மட்டும் போனா எப்புடி சார் ? இன்ட்லியிலும் தமிழ்மணத்திலும் ஒட்டு போடுங்க சார்
சர்தாரு ரயில் ஓட்டுனாரு
நீதி மன்றத்துக்கு ஒரு வித்தியாசமான வழக்கு ஒன்னு வருது. அதாவது ரயில் டிரைவரா வேலை செய்யற நம்ப சர்தாரு மேல தான் வழக்கு .
வழக்கு என்னான்னா , ட்ரெயின் போயிகிட்டு இருக்கறப்ப தண்டவாளத்துல இருந்து ட்ரெயின் -ஐ கீழே இறக்கி ஆயிரக்கணக்கான பயணிகளை சாவடிக்க பார்த்தாரு , இதுதான் வழக்கோட சாராம்சம் .
ஜட்ஜ் கேட்குறாரு , " என்னா சர்தாரு , உன் மேல இப்படி ஒரு குற்றசாட்டு சொல்லி இருக்காங்களே அது உண்மையா ?
",ஆமாங்கய்யா ", - நம்ப சர்தாரு,
" , ஏன் இப்புடி செஞ்ச ? உன்னைய நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் ட்ரெயின் - ல உட்காந்துகிட்டு வர்றாங்களே , நீ இப்படி செய்யாலாமா? -- இது ஜட்ஜ் ,
அய்யா நான் இப்படி செய்ய கூடாது தான் , ஆனா நான் ட்ரெயின் ஓட்டிகிட்டு இருந்தப்ப ஒருத்தன் தண்டவாளத்துல நடந்து வந்துகிட்டு இருந்தான் . அவன காப்பாத்தலாம்-- ன்னு நினைச்சேன் .
ஏன்யா ! நீ அவன் ஒருத்தன காப்பாத்தரத்துக்கு இவங்க எல்லாரையும் பலி கொடுக்கனுமா , அவன் மேல உட்டு ஏத்திகிட்டு போக வேண்டியதுதானே - ன்னு ஜட்ஜ் கேட்டார்.
அய்யா ! உங்களுக்கு வந்த இந்த யோசனை எனக்கும் வந்துச்சு , அதனால அவன் மேல உட்டு ஏத்திகிட்டு போலாம் ன்னு நெனச்சேன் . ஆனா பாருங்க ,. ட்ரெயின் பக்கத்துல வர வர அந்த நாயி , தண்டவாளத்துல இருந்து இறங்கி காட்டு பக்கம் போக ஆரம்பிச்சுட்டான் . உடுவனா நானு , அவன தொரத்திகிட்டு ....................................
திங்கள், 13 ஜூன், 2011
சர்தார்ஜி டில்லி-க்கு போனாரு
சர்தார்ஜி ஒரு நாள் டில்லி க்கு சுத்தி பாத்துட்டு வர போனாரு . அங்க ஒரு பெரிய பில்டிங்கை பாத்துட்டு மலைச்சு போய் நின்னு பார்த்துகிட்டே , " அடேங்கப்பா ! எவ்வளவு பெரிய பில்டிங்... சரி எத்தினை மாடி இருக்குன்னு எண்ணிபுடலாம்-- ன்னு ஒன்னு , ரெண்டு ,ன்னு எண்ணிகிட்டு இருக்க்ருறார் . அப்பா அந்த வழியா வந்த நம்பாளு " யோவ் சர்தாரு என்ன பண்ணிக்கிட்டு இருக்கிற ! ன்னு கேட்க ,
அதுக்கு சர்தார், பில்டிங்ல எத்தினை மாடி இருக்குன்னு எண்ணிகிட்டு இருக்கிறேன் ன்னு சொல்றாரு ! அதுக்கு நம்பாளு யோவ் இங்க மாடி எண்ணரத்துக்கு காசு கொடுக்கணும் ன்னு சொல்றாரு !
சர்தார் பயந்து போய் நம்பாளு கிட்ட எவ்வளவு ? ன்னு கேட்க அதுக்கு நம்பாளு " ஒரு மாடி என்ன நூறு ருபா ன்னு சொல்லி, " இப்போ எத்தினை மாடி என்னுன ன்னு கேட்க , அதுக்கு நான் 15 மாடி எண்ணி இருக்கிறேன் ன்னு சொன்னாரு .
சரி கொடு 1500.௦௦ ன்னு கேட்டு வாங்கிகிட்டு போறாரு நம்பாளு. நம்பாளு போனவுடன் சர்தாரு பயங்கரமா சிரிக்கறாரு , அப்போ பக்கத்துல வந்த ஒருத்தன் யோவ் ஏன் இப்புடி சிரிக்கிற? ன்னு கேட்க , அதுக்கு சர்தாரு நடந்த கதைய சொல்லி சிரிக்கிறாரு .
அதுக்கு அவன் யோவ் இதுல சிரிக்கிறத்துக்கு என்ன இருக்கு ன்னு கேட்டா சர்தாரு சொன்னாரு " . அட போய்யா , அவன் நல்லா ஏமாந்துட்டான் .நான் மொத்தம் 26 மாடி என்ணிபுட்டு அந்தாளுகிட்ட 15 மாடி ன்னு பொய் சொல்லி புட்டேன் , அதனால எனக்கு 1100 .௦௦ ருபா லாபம் ன்னு சொன்னாராம் ...
ஞாயிறு, 12 ஜூன், 2011
சர்தார்ஜி சுகர் டெஸ்ட்
டாக்டர் கிட்ட பொய் உடம்பை காண்பித்து விட்டு வீட்டுக்கு வந்த சர்தார்ஜி அடிக்கடி கிச்சன் பக்கம் போய் சர்க்கரை டப்பாவை திறந்து பார்த்துவிட்டு பின் மூடி வைத்துவிட்டு வருகின்றான் .
அதை கவனித்த அவன் மனைவி , ஏங்க , ஏன் அடிக்கடி போய் சர்க்கரை டப்பாவை திறந்து பார்த்துவிட்டு வர்றீங்க ? என்ன விசியம் ன்னு கேட்டாள்.
அதுக்கு சர்தார் சொன்னான் , டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணி பாருங்கன்னு சொன்னாரு அதான் நான் பார்த்துக்குறேன் -- ன்னு
வேலை எல்லாம் மறந்துட்டு கொஞ்ச நேரம் சிரிக்க
இந்த பிளாக் வேலையே எல்லாத்தையும் கொஞ்ச நேரம் நாச்சும் சிரிக்க வைக்கிறது தான் . இது முழுக்க முழுக்க ஜோக் மட்டுமே .. ஜாலியா சிரிங்க
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
