மினரல் வாட்டர் ப்ளான்ட்

திங்கள், 13 ஜூன், 2011

சர்தார்ஜி டில்லி-க்கு போனாரு

சர்தார்ஜி  ஒரு நாள் டில்லி க்கு சுத்தி பாத்துட்டு வர போனாரு . அங்க ஒரு பெரிய பில்டிங்கை பாத்துட்டு மலைச்சு போய் நின்னு பார்த்துகிட்டே , " அடேங்கப்பா ! எவ்வளவு பெரிய  பில்டிங்... சரி எத்தினை மாடி இருக்குன்னு எண்ணிபுடலாம்-- ன்னு  ஒன்னு , ரெண்டு ,ன்னு எண்ணிகிட்டு இருக்க்ருறார் . அப்பா அந்த வழியா வந்த நம்பாளு " யோவ் சர்தாரு என்ன பண்ணிக்கிட்டு இருக்கிற ! ன்னு கேட்க ,  

                    அதுக்கு சர்தார், பில்டிங்ல எத்தினை மாடி இருக்குன்னு எண்ணிகிட்டு இருக்கிறேன் ன்னு சொல்றாரு ! அதுக்கு நம்பாளு  யோவ் இங்க மாடி எண்ணரத்துக்கு காசு கொடுக்கணும் ன்னு சொல்றாரு ! 

                   சர்தார் பயந்து போய் நம்பாளு  கிட்ட எவ்வளவு ? ன்னு கேட்க அதுக்கு நம்பாளு " ஒரு மாடி என்ன நூறு ருபா ன்னு சொல்லி, " இப்போ எத்தினை மாடி என்னுன ன்னு கேட்க , அதுக்கு நான் 15 மாடி எண்ணி இருக்கிறேன் ன்னு சொன்னாரு .

                   சரி கொடு 1500.௦௦    ன்னு கேட்டு வாங்கிகிட்டு போறாரு நம்பாளு. நம்பாளு போனவுடன்  சர்தாரு பயங்கரமா சிரிக்கறாரு , அப்போ பக்கத்துல வந்த ஒருத்தன் யோவ் ஏன் இப்புடி சிரிக்கிற? ன்னு கேட்க , அதுக்கு சர்தாரு நடந்த கதைய சொல்லி சிரிக்கிறாரு .

                  அதுக்கு அவன் யோவ் இதுல சிரிக்கிறத்துக்கு என்ன  இருக்கு ன்னு கேட்டா சர்தாரு சொன்னாரு " . அட போய்யா , அவன் நல்லா ஏமாந்துட்டான் .நான் மொத்தம் 26   மாடி   என்ணிபுட்டு அந்தாளுகிட்ட  15 மாடி ன்னு பொய்  சொல்லி புட்டேன் , அதனால எனக்கு 1100 .௦௦ ருபா லாபம் ன்னு சொன்னாராம் ...

6 கருத்துகள்:

JesusJoseph சொன்னது…

அனைத்தும் நல்ல காமெடி

நன்றி,
ஜோசப் (http://www.tamilcomedyworld.com)

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நல்ல நகைச்சுவையுடன் வந்திருக்கிங்க..
வாங்க.. வாங்க...

பொ.முருகன் சொன்னது…

அந்த சர்தார் ஒரு செல்லாத நோட்டு வச்சி கொடுத்து என்ன ஏமாத்திட்டாரு.அவரு போன் நம்பர் தெரிஞ்சவங்க எனக்கு தெறிவிக்கலாம்.

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் தொடர்ந்து கலக்குங்க..!!

முரளிநாராயணன் சொன்னது…

நல்ல நகைச்சுவை.வாய் விட்டுச் சிரித்தேன்

BKK சொன்னது…

நல்ல comedy

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக