நீதி மன்றத்துக்கு ஒரு வித்தியாசமான வழக்கு ஒன்னு வருது. அதாவது ரயில் டிரைவரா வேலை செய்யற நம்ப சர்தாரு மேல தான் வழக்கு .
வழக்கு என்னான்னா , ட்ரெயின் போயிகிட்டு இருக்கறப்ப தண்டவாளத்துல இருந்து ட்ரெயின் -ஐ கீழே இறக்கி ஆயிரக்கணக்கான பயணிகளை சாவடிக்க பார்த்தாரு , இதுதான் வழக்கோட சாராம்சம் .
ஜட்ஜ் கேட்குறாரு , " என்னா சர்தாரு , உன் மேல இப்படி ஒரு குற்றசாட்டு சொல்லி இருக்காங்களே அது உண்மையா ?
",ஆமாங்கய்யா ", - நம்ப சர்தாரு,
" , ஏன் இப்புடி செஞ்ச ? உன்னைய நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் ட்ரெயின் - ல உட்காந்துகிட்டு வர்றாங்களே , நீ இப்படி செய்யாலாமா? -- இது ஜட்ஜ் ,
அய்யா நான் இப்படி செய்ய கூடாது தான் , ஆனா நான் ட்ரெயின் ஓட்டிகிட்டு இருந்தப்ப ஒருத்தன் தண்டவாளத்துல நடந்து வந்துகிட்டு இருந்தான் . அவன காப்பாத்தலாம்-- ன்னு நினைச்சேன் .
ஏன்யா ! நீ அவன் ஒருத்தன காப்பாத்தரத்துக்கு இவங்க எல்லாரையும் பலி கொடுக்கனுமா , அவன் மேல உட்டு ஏத்திகிட்டு போக வேண்டியதுதானே - ன்னு ஜட்ஜ் கேட்டார்.
அய்யா ! உங்களுக்கு வந்த இந்த யோசனை எனக்கும் வந்துச்சு , அதனால அவன் மேல உட்டு ஏத்திகிட்டு போலாம் ன்னு நெனச்சேன் . ஆனா பாருங்க ,. ட்ரெயின் பக்கத்துல வர வர அந்த நாயி , தண்டவாளத்துல இருந்து இறங்கி காட்டு பக்கம் போக ஆரம்பிச்சுட்டான் . உடுவனா நானு , அவன தொரத்திகிட்டு ....................................
2 கருத்துகள்:
விடாதிங்க பிடிங்க... அவன் எப்படி ஓடலாம்...
நன்ராக இருக்கிரது.
கருத்துரையிடுக